மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10% பேர் தேர்ச்சி மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் (செட்) மிக அதிக அளவாக 10.64 சதவீதம் (5,495) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் 10 நகரங்களில் 76 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 51,669 பேர் எழுதினர். மொத்தம் 27 பாடங்களிலும் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2011-ல் நடைபெற்ற ஸ்லெட் தேர்வில் 3.39 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஏறத்தாழ மூன்று மடங்காக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்ப் பாடத்தில் 826 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வணிகவியல் பாடத்தில் 630 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸில் 589 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரத்தில் இயல் அறிவியல் பாடங்களில் மிகவும் குறைந்தபட்சமாக 125 பேர் (4.74 சதவீதம்) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, மாநில விரிவுரையாளர் தகுதித...
Posts
Showing posts from February 10, 2013