Posts

Showing posts from February 8, 2013
முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும் - மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார். சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்: ம.ம.க., திரு.ஜவாஹிருல்லா : சிறுபான்மைகல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்தும், நிரப்பப்படாமல் உள்ளது. மாண்புமிகு அமைச்சர் திரு. பழனியப்பன் : சிறுபான்மையினர் கல்லூரிகளில், 3,120 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அப்பணியிடங்கள் எந்த வகைகளில் காலியானவை என்பது குறித்து, மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் அந்த கல்லூரிகள், சிறுபான்மை தகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜவாஹிருல்லா: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 21 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உருது, தெலுங்கு, மலையாளம் வழி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப,...
10ம் வகுப்பு வரையான பாட புத்தகங்கள் தட்டுப்பாடு : டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.  தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான பாடப் புத்தகங்களை, அச்சிட்டு வழங்குகிறது. இதில், எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அரசு பள்ளி மாணவர், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் தனியார் பள்ளி மாணவர் என, அனைத்து தரப்பு மாணவ, மாணவியருக்கும், 8 கோடிபாடப் புத்தகங்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது.  சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், எப்போது சென்றாலும், பாடப் புத்தகங்கள், விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், சமீபகாலமாக, ஆசிரியர் போட்டித் தேர்வுகள், அதிகளவில் நடந்து வருவதால், பாடப் புத்தகங்களுக்கு, அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு, "கோச்சிங் சென்டர்'களையே, தேர்வர், நம்பி இருக...