Posts

Showing posts from February 6, 2013
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.  டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்–1 தேர்வு முடிவு இறுதிப்பட்டியல் இன்று வெளியானது. மனித நேய மையத்தில்படித்தவர்கள் முதல் 2 இடங்களை பிடித்தனர். போலீஸ் டி.எஸ்.பி., துணை கலெக்டர் போன்ற பணிகளுக்கு, தமிழக அரசின், அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதற்கு முதலில் முதல் நிலைத்தேர்வும், பிறகு மெயின் தேர்வும் நடத்தப்பட்டது.  2,600 பேர் மெயின் தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களில், 262 பேர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.இவர்களில் 131 பேர் பணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 262 பேர் இறுதிப்பட்டியல் (மார்க் பட்டியல்) நேற்று வெளியிடப்பட்டது.  தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.இதில், முதல் 8 இடங்களில் வெற்றிபெற்றவர்களில், 5 பேர் மனித நேய மையத்தில் படித்தவர்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:– எஸ்.மதுராந்தகி–முதல் இடம் ஜி.சரவணமூர்த்தி–2–வது இடம். சுபாநந்தினி–4–வது இடம் சாதனைகுரல்–5–வது இடம் நாராய...