முதலில் வேலை, பின்னர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எல்.ஏ ஆபீசில் மனு தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஊழியரிடம் மனு அளித்தனர். அதில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஆசிரியர் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட் டாய கல்வி உரி மைச் சட்டத்தில் தகு தித் தேர்வு தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் அனுமதியளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து விட்டு, ஐந்து ஆண்டுகளில் அவர் களை தகுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண் டும். இதற்கு முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து சங்க தலைவர் சுந்தர் கூறுகையில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படியான தகுதித் தேர் வை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருப்போருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
Posts
Showing posts from February 5, 2013