அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 பேராசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளைத் தடுக்க போட்டித்தேர்வு வேண்டும்: விரிவுரையாளர்கள் கோரிக்கை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று விரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்வலியுறுத்தினர். இப்போதுள்ள முறையின் படி நேர்முகத் தேர்வுக்கும், அனுபவத்துக்கும் அதிக மதிப்பெண் இருப்பதால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புதிய முறையில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), மாநில விரிவுரையாளர்தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்க நிலையில், இந்தத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் இ...
Posts
Showing posts from February 4, 2013