ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித்தேர்வில் சலுகை கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி 2வது முறையாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதிலும் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, சஙாகீதா உள்ளிட்ட 14 பேர் ஒதுக்கீடுஅடிப்படையில் தங்களுக்கு தகுதி மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும்எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:தரம்வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது என்று தமிழகஅர
Posts
Showing posts from February 3, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது. இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டு