Posts

Showing posts from January 31, 2013
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும்  மதுரை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், Ôஎங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.  அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுக்களை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், பின்னர், மாநிலபதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி,அதில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, தமிழகத்தில்...
அரசுத் துறைகளில் 10,105 காலியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு:  டி.என்.பி.எஸ்.சி. தகவல் தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 10 ஆயிரத்து 105 காலிப் பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.  இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.இதில், 27 அரசுத் துறைகளில் 35 பதவிகளில் காலியாகவுள்ள 10 ஆயிரத்து 105 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படும். குரூப் 1 தேர்வு இனி மாநில குடிமை பணி தேர்வு என மாற்றப்பட்டுள்ளது.  பத்தாண்டுக்குப் பிறகு தேர்வு முறை பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 1,500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2 தேர்வில் 1,500 பணியிடங்களும், குரூப் 4-ல் 2 ஆயிரத்து 716 பணியிடங்களும் காலியாக உள்ளன.  இந்தப் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.மேலும், 2 ஆயிரத்து 300 மருத்துவர் பணியிடங்களும், 1,500 கால்நடை மருத்துவர் பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்ப ஏற்பாடு செய்யப்...