Posts

Showing posts from January 29, 2013
தமிழ் வழியில் பி.எட் படித்தவர்கள் யார்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள 3438 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த மே 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது. 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் எழுதினர். 3103 பேர் தேர்ச்சி பெற்றனர். டிசம்பர் 11ம் தேதி பணி நியமனம் பெற தகுதி உள்ளவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.  அந்த பட்டியலில் உள்ளபடி முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது. அதே போல தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டம், பி.எட் பட்டம் ஆகியவற்றை தமிழ் வழியில் படித்துள்ளதாக விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரசு உத்தரவுப்படி 20 சதவீதம் பணி நியமனம் வழங்கப்பட வேண்டியுள்ளது.  இதையடுத்து எந்தெந்தபல்கலைக் கழகங்கள் தமிழ் வழியில் முதுநிலை மற்றும் பி.எட் பட்டங்களை நடத்துகின்றன என்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் (பி.எட் பல...
1200 பணி இடங்கள் காலி:கணினி அறிவியலை பிற ஆசிரியர்கள் நடத்திவரும் அவலம்,பொதுத் தேர்வு மாணவர்கள் தவிப்பு .  தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள், அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.  2001 முதல், 2012 வரை, தமிழகம் முழுவதும், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்துக்கு, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர்.  இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இப்பாடத்தில் மாணவர்களின் தேர்ச்...