ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்- Dinamalar தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு, நிலைமையை சரிசெய்யும் முயற்சிகள் நடந்தாலும், நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனத்தை, அரசு உடனடியாக மேற்கொண்டால் ஒழிய, இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாநிலமெங்கும் மொத்தம் 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், அரசுக் கல்லூரிகளைப்பொறுத்தவரை, 1,623 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இத்தகவலை, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு(AUT) வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியில், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, கணிதம் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள், பேராசிரியர் பற்றாக்குறை நிலவும் துறைகளில் முக்கியமானவை. சில ம
Posts
Showing posts from January 28, 2013
- Get link
- X
- Other Apps
பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. தகுதித்தேர்வு மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்துவேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது. அடிப்படை உரிமை இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்