5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பள்ளிக்கு பூட்டு போடுவோம் கூடுதல் ஆசிரியர் நியமனம் கோரி போராட மக்கள் முடிவு வேதாரண்யம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும், இல்லாவிடில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கொத்தங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இங்கு தனலட்சுமி என்ற ஆசிரியையும், சிங்காரவடிவேல் என்ற ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். இதில் தனலட்சுமி வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றுவிட் டார். குடும்ப பிரச்னை தொடர்பாக சிங்கார வடி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின் கடந்த வரு டம் ஜூன் மாதம் தலைமை ஆசிரியராக மகேந்திரன் என்பவர்பொறுப்பேற்றார். அதிலிருந்து 5 வகுப்புகளுக்கும் இவர் ஒருவர் மட்டுமே ஆசிரியராகவும் இருந்து வருகிறார். 5 வகுப்புகளிலும் உள்ள 30 மாணவர்களையும் ஒரே அறையில் உட்கார வைத்து...
Posts
Showing posts from January 27, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமன ஒப்புதல்களை ரத்து செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்23.8.2010-க்கு பின் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வு பெற்றிருந்தால்தான், பணி அமர்த்த ஏற்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர் நியமனங்கள் முறையாக ஏற்பளிக்கப்பட்டு ஊதியம் பெற்று வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆணை 23.8.2010-க்கு முன்பாக வெளியிட்டு இருந்தால் பொருத்தமானதாக இருந்து ...
- Get link
- X
- Other Apps
கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்' வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும் பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்? இன்றைய கணித பாட திட்டங்கள் எல்லாமே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக உள்ளன. கற்பிக்க கூடிய விதத்தில் கற்பித்தால், கணிதமும் இனிக்கும்' என்கிறார், கணித பேராசிரியர் சிவராமன். அவரோடு உரையாடியதில் இருந்து... கணித பாடத்தை எளிமைப்படுத்துவது எப்படி? முறையான கற்பித்தல் இல்லாததால், பல மாணவர்களுக்கு கணிதம் கசக்கத்தான் செய்கிறது. கணிதத்தை காட்சிப்படுத்திபுரிய வைக்க வேண்டும். சாதாரண பெருக்கல், கூட்டல், கழித்தல் தெரியாமல், பல அரசு பள்ளி மாணவர்கள் ஆரம்ப பள்ளியை, முடித்துவிடுகின்றனர்.காரணம், மனப்பாடம் செய்யும் முறை தான். இரண்டு எண்களை பெருக்க, ஒரே வழியை தான் மாணவர்களுக்கு கற்று தருகிறோம். உதாரணமாக 2*2=4. இதை தவிர ஆறு முறைகளில் எளிய பெருக்கலை கற்று கொடுக்க முடியும். மேலும், கணிதத்தை மாதிரிகள் கொண்டு, வடிவங்களை உருவாக்குதல் முறை மூலமாக, விளையாட்டு ரீதியில் கற்று கொடுத்தால், எந்த எண்ணை...
- Get link
- X
- Other Apps
8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை! "சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்குவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறியதாவது: நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணிதுவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து...