பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில்பணி நியமன ஆணைகள் கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. 139 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், 155 அரசுப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு 2012 ஏப்ரல், மே மாதங்களில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 8-ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வுப் பட்டியல் அக்டோபர் 18-ம் தேதியும் வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தேர்வு பெற்ற விரிவுரையாளர்கள், பேராசிரியர்களோடு அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி இயக்குநரக வட்டாரங்கள் கூறியது:- அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரி உதவி...
Posts
Showing posts from January 25, 2013