Posts

Showing posts from January 23, 2013
சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?- Dinamalar கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது.  இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தே...
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 28ல் வெளியீடு   சென்னை: 2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் எனதேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.  வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.  அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர் வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம் 24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும். குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.  இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும். எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும்,...