Posts

Showing posts from January 22, 2013
ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: டில்லி கோர்ட் தீர்ப்பு  புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவிவகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைஅடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது.  லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும்,ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம்,...
பி.பி.இ. பட்டத்தை அங்கீகரித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது பி.பி.இ. பட்டம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.பி.இ. பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 2012, மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.  இதில், மாவட்டந்தோறும் வணிகவியல்பொருளாதாரம் (பி.பி.இ.) படித்த பட்டதாரிகளும் பொருளாதாரப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். பின்னர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பொருளியல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பி.பி.இ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த பட்டத்தை அங்கீகரிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டது.  பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையான படிப்பு பி.பி.இ. என தமிழக அரசு ஆணை பிறப்பித்...
எம்.பில்., பி.எச்டி., பட்டங்களைப் பெற்றிருந்தாலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியஉயர்வு: அரசாணை வெளியீடு பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டத்தை நீக்கிவிட்டன.  இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது.  பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் எ...