Posts

Showing posts from January 21, 2013
23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அந்நகலினை உடன் அனுப்ப - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு    கடித ந.க.எண் 37718-F2/11 15.11.2012  23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனத்திற்கு ஒப்புதல்வழங்கப்பட்டு இருப்பின் அந்த நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அவ்வனையினை உரிய பள்ளிகளுக்கும் , அந்நகலினை இயக்ககத்திற்கும் உடன் அனுப்ப கல்வி அலுவலர்களுக்கு - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க தடை சென்னை : மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க புதிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் கட்டமாகஜூலை மாதம் நடந்தபோது 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த துணைத் தேர்வில் 17,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 19,343 பேருக்கு பணி வழங்கப்பட்டது. இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்களில்(டயட்) இந்த பயிற்சி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.   இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: அனைத்து மாணவர்களிடமும் அன்புடன் பழகுதல், வேறுபாடு பார்க்காமல் நடுநிலையுடன் நடத்தல், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்துதல் ஏற்படாத வகையில் நடத்தல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.  மாணவர்களுக்கு கற்பிக்கும் போது நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுடன் எப்படி உரையாடுவது, சக ஆசிரியர்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வது, உள்ளிட்டவை சொல்லித்தர வேண்டும். ஆசிரியர்கள் எக...
ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்தும் என எதிர்பார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:  இடைநிலை ஆசிரியர்கள் - 2,210  பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் - 1,063  சிறப்பாசிரியர்கள் - 841  (மேற்காணும் எண்ணிக்கைகள் க...
கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம்கட் -Dinakaran  சிவகங்கை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும்....