ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு- Dinamalar ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது", என்றார். ( தற்சமயம் வரை அத்தகைய எந்த பட்டியலும் வெளியாகவில்லை, விரைவில்வெளியாகும் என எதிர்பார்க்கலாம்)
Posts
Showing posts from January 20, 2013