Posts

Showing posts from January 18, 2013
ஆசிரியர் நியமனத்தில் ஊழல் புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட, 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சவுதாலா உள்ளிட்ட, 55 பேரும், நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவி வகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, லஞ்சம