Posts

Showing posts from January 16, 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் ரேங்க் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.உயிரியல் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரியல் பாடத்தில் தேர்வுப் பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: மார்ச்சில் நடராஜ் ஓய்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடை@ய, கடும் போட்டி எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி யான நடராஜ், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் .இணையதளம் வழியாக பதிவு, "ஹால் டிக்கெட்' வினியோகம், தேர்வு நடவடிக்கைகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை, வீடியோ மூலம் பதிவு, தேர்வு முடிந்ததும், உடனடியாக முடிவை வெளியிட்டு, கலந்தாய்வு முறை அறிமுகம், குறிப்பிட்ட தேர்வுகளை, கம்ப்யூட்டர்வழியாக நடத்துவது என, தேர்வாணைய நடவடிக்கைகள் அனைத்திலும், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தார்.இதனால், முந்தைய நிர்வாகத்தினரால் ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து, லட்சக்கணக்கான பட்டதாரிகள் மத்தியில், மீண்டும் தேர்வாணையத்தின் மீது, நம்பகத்தன்மையை ஏற்படுத்தினார்.  தலைவர் மற்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் , அரசின் கவனத்திற்கு சென்றது தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர்.  அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம்