Posts

Showing posts from January 10, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET), பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET), ராஜஸ்தான் (RTET), உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதிதேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன. அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு...