புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் நெல்லை : புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளிகல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2013,14ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்கள், சிறுபான்மை மொழி, இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் காலி பணி இடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்ப பதவி உயர்வு மூலமாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தேர்வாளர் பட்டியல் பெற்று நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. இதற்காக உத்தேச பணியிட மதிப்பு பட்டியலை அரசின் பார்வைக்கு அனுப்புவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்கள் குறித்த முழுவிவரங்களை வரும் 21ம் தேதிக்குள் தயாரித்துஇணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தவறாக இருந்தால் அதற்கான பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க நேரிடும் எனவும், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளை பொருத்தவரை சம்பந்த...
Posts
Showing posts from January 4, 2013
- Get link
- X
- Other Apps
TET Exam Date June 3 - 2013 ! அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று. மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது. மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும்என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளையாரோ உலவ வி...