Posts

Showing posts from January 2, 2013
மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடி மாற்றம். டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்நிலைதேர்வில், ‘ஆப்டிடியூட்’ என்ற புதிய பாடமும், மெயின் தேர்வு பொதுஅறிவு தாளில் ஆங்கில பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.  அதோடுமெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.குரூப்–1 தேர்வு துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்–1தேர்வு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகின்ற இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   இந்த தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது ஆகும். இதுவரையில், முதல்நிலை தேர்வில...