குரூப் 1 தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை பணம் செலுத்தலாம். தேர்வு தேதி டிசம்பர் 31லிருந்து ஜனவரி 27க்கு ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Posts
Showing posts from January 1, 2013
- Get link
- X
- Other Apps
நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு- Dinamalar முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர். பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர். எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்...
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி சென்னை: புதிதாக தேர்வு பெற்ற, முதுகலைஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமனஉத்தரவுகளை பெற்றனர். போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு , கடந்த மாதம் , 13 ம் தேதி , சென்னையில் நடந்த விழாவில் , தேர்வு பெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன . இதைத் தொடர்ந்து , பணி நியமன கலந்தாய்வு , 32 மாவட்டங்களிலும் , நேற்று நடந்தது . 2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும் , 2,273 பணியிடங்கள் மட்டும் , நேற்று நிரப்பப்பட்டன . மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , காலையிலும் ; வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு , பிற்பகலிலும் நடந்தன . மொத்த தேர்வர்களில் , 1,600 பேர் , அவரவர் சொந்த மாவட்டங்களில் , பணி நியமன உத்தரவுகளை பெற்றனர் . மீதமிருந்த , 673 பேர் மட்டும் , சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால் , வெளி மாவட்டங்களில் உள்ள ...
- Get link
- X
- Other Apps
TNPSC - 2013 வருட முழுமைக்கும் தெளிவான ஒரு தேர்வுநாள் அறிவிப்பு வெளியிடப்படும். TNPSC டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013–ம் ஆண்டு எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? என்ற கால அட்டவணை ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியும். அரசு வேலைக்கு தேர்வு தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், சார்நிலை பணியாளர்கள், குரூப்–ஏ அதிகாரிகள் போன்றோர் தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது. போட்டித்தேர்வுகள் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என்று பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகிறது. எழுத்தர்களும்,தட்டச்சர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் குரூப்–4 தேர்வு மூலமாகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், சார்–பதிவாளர்கள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், பேர...
- Get link
- X
- Other Apps
முதல்வரிடம் பணி நியமன ஆணை பெற்றும் கலந்தாய்வில் பெயர் இல்லை : ஆசிரியை கதறல்-Dinakaran 01 Jan 2013 05:00, நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் கடந்த 13ம்தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதில் நெல்லை மாவட்டத்தில் வணிகவியல் பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தென்காசியை சேர்ந்த அருண் ஷோபனாவும் உத்தரவு கடிதம் பெற்றார். இந்நிலையில், நேற்று நடந்த ஆன்லைன் கலந்தாய்வில் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதற்கானஅழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், சிஇஓவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஷோபனா கதறி அழுதார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆசிரியை அருண் ஷோபனாவின் உறவினர்கள் சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அதற்கு, உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக பதிலளித்தனர். இதையடுத்து அவர் சி...