பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்: தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல்.

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. 

விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். 

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog