கல்லூரி பேராசிரியர் இடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க கோரிக்கை 

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் இரா.மூர்த்தி வெளியிட்ட செய்தி: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது. 

ஆனால், இந்த ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் பதவி நிலையில், கல்லூரி பேராசிரியர்கள் ஒருவர்கூட இல்லை. இந்த இடங்களில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளே இடம்பெற்றுள்ளனர். உதவிப் பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வை கல்லூரி கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் நடத்துவதே சிறப்பாக இருக்கும்.எனவே கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தனித் தேர்வு வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog