நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மத்திய மந்திரி பல்லம் ராஜூ தகவல் நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம். ஆனால் தரமான கல்விச்சேவையில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை விளங்கி வருகிறது.நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog