முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு புதிய வழக்கு தாக்கல்
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிடா உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் அஜாரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment