முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர்.
விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,"முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார்.
அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்' என்றார்.
இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: "பி' வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. "பி' வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர்.
அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Comments
Post a Comment