ஆசிரியர் தகுதி தேர்வில் வென்ற ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய தகுதி சான்றிதழ்

 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தகுதி சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியம்,அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. இவை,விரைவில் வழங்கப்படஉள்ளன. 

 ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, தகுதிதேர்வு, 2012ஜூலையில் நடந்தது. இத்தேர்வில், 6.60 லட்சம் பேர்பங்கேற்றனர். வெறும், 2,448 பேர் மட்டுமே,மாநிலம் முழுவதும் தேர்வு பெற்றனர்.

இதையடுத்து,அக்டோபர், 14ம்தேதி,மறுதேர்வுநடத்தி,தேர்வு பெற்றவர்களின் விவரங்கள், நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதிசான்றிதழ்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வு எழுதும், பள்ளி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும், மதிப்பெண் சான்றிதழை போன்று, ஆசிரியர் தகுதி சான்றிதழும் வடிமைக்கப்பட்டுள்ளது. புகைப்படம்,தனித்துவமான ரகசிய குறியீடு,தேர்ச்சி பெற்ற நபரின் பெயர்,பிறந்ததேதி,தேர்ச்சி பெற்ற தாள் மற்றும் பாடம், மதிப்பெண்கள் ஆகியவை,சான்றிதழில் தெளிவாக அரசாங்க முத்திரையுடன் இடம்பெற்றுள்ளன

Comments

Popular posts from this blog