டி.இ.டி., தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படையெடுப்பு; குறைகளை கேட்க தனி மையம் அமைப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல், பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு, உரிய பதில் அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரிகளை சந்திப்பது என்பது, சாமானிய காரியம் அல்ல. பாதுகாப்பு நிறைந்த பகுதி என, கூறி, பார்வையாளர்களை, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி விடுவர். தேர்வில், குளறுபடிகள் நடந்தால், தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படை எடுத்துவிடுவர். அவர்களை சமாளிக்கும் வகையில், அலுவலக வாயிலில், பணியாளர் ஒருவரை நியமித்து, தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், தற்போது, டி.இ.டி., தேர்வில் எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக, தேர்வர்கள் ஏராளமானோர், தினமும், டி.ஆர்.பி.,க்கு சென்றபடி உள்ளனர். தற்காலிக விடைகளை வெளியிட்டபோதே, தவறான விடைகளை ஆட்சேபித்து, ஏராளமான தேர்வர்கள், விண்ணப்பம் அளித்தனர். "இதை ஆய்வு செய்து, இறுதி விடைகளை வெளியிடும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., பதிலளித்தது. ஆனால், நவ., 5ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவுடன் கூடிய இறுதி விடையில், சரியான விடைகள் பலவற்றுக்கு, உரிய மதிப்பெண் வழங்காதது, தேர்வர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு, சென்றபடி உள்ளனர். தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று, உரிய பதில் அளிப்பதற்கு ஏதுவாக, அலுவலக வாயிலில், குறை கேட்பு மையம் ஒன்றை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. இங்குள்ள பணியாளர், தேர்வர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறார். சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காதது குறித்தும், சரியான விடை என்பதற்கான ஆதாரங்களையும், விண்ணப்பத்துடன் இணைத்து, தேர்வர்கள் வழங்கி வருகின்றனர். எனவே, இந்த விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Comments

  1. respected sir next exam eppa vaipanganu guess panna mudiyuma

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog