தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்
''குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரியகல்வி தகுதியை மட்டும், தமிழ்வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில்,உரிமைகோரலாம்,'' என,பள்ளிகல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
முன்னுரிமை அளிக்க: முந்தைய தி.மு.க.,ஆட்சியில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு,அரசு வேலைவாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடுசெய்து,உத்தரவிடப்பட்டது. எனினும்,பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்விதகுதியை, தமிழ்வழியில், படிக்கமுடியாத நிலைமை தான் உள்ளது.
பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில்,பலர், தாங்கள் தமிழ்வழியில் படித்ததாக கூறி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். மேலும்,தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து,பெரும்குழப்பம்நிலவிவருகிறது.
இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர்,ஆசிரியர் தேர்வுவாரியத்திடம்(டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ்வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி,பணிக்கு உரிய கல்வித்தகுதிவரை,அனைத்திலும்,தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்' என,முதலில்,டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.ஆனால், 'குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்விதகுதியை மட்டும்,தமிழ்வழியில் படித்திருந்தால் போதும்'என,பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்தவிவகாரத்தில்,தற்போது வரை,குழப்பம்நிலவிவருகிறது.
இதுகுறித்து,பள்ளி கல்வித்துறை செயலர்,சபிதா கூறியதாவது:
தமிழ்வழியில் படித்தவர்கள், 20சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்,அரசுவேலை பெறுவதற்கான வழிமுறைகளில், தமிழகஅரசு,தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல்,இதில்,பலரும் குழம்பி வருகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்பணி எனில்,இளங்கலை பட்டப்படிப்பையும், பி.எட்.,படிப்பையும்,தமிழ் வழியில் படித்திருந்தால்போதும். 10ம் வகுப்பையும், பிளஸ்2 படிப்பையும்,ஆங்கில வழியில் படித்திருந்தாலும்,கவலையில்லை. அதேபோல்,முதுகலைஆசிரியர்பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப்படிப்பையும்,பி.எட்.,படிப்பையும், தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்;அவ்வளவுதான்.
பிளஸ்2 கல்வித்தகுதி உடைய அரசுபணி எனில்,பிளஸ்2 படிப்பை,தமிழ் வழியில் படித்திருந்தாலேபோதும்.கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர்,தேர்வை,தமிழ் வழியில் எழுதுகின்றனர்.இதைவைத்து, 'தமிழ்வழியில் படித்திருக்கிறேன்' என,கூறுகின்றனர்.எந்த,'மீடியத்தில்' சேர்ந்திருக்கின்றனரோ,அதுதான்,கணக்கில்கொள்ளப்படும்.இவ்வாறு,அவர் தெரிவித்தார்

Comments
Post a Comment