1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை (01.12.2013) குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது
தமிழக அரசின்,பல்வேறு துறைகளில்,காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப்- 2 முதல் நிலைத்தேர்வு நடக்கிறது. 6.65லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)முழுவீச்சில் செய்துமுடித்துள்ளது.
வணிகவரித்துறை உதவி அலுவலர்,தொழிலாளர் நலஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன.
2,269 மையங்கள்:
இது குறித்த அறிவிப்பு,செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.கடைசி தேதிமுடிந்த பின்,விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், 6.65லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன. நாளை காலை, 10:00மணி முதல்,பகல், 1:00மணிவரை,மாநிலம்முழுவதும், 2,269 மையங்களில், தேர்வுநடக்கிறது. அனைத்து மையங்களிலும், தேர்வுப்பணியை, வீடியோ பதிவுசெய்ய, டி.என்.பி.எஸ்.சி.,ஏற்பாடு செய்துள்ளது. 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள்,பணியாளர்கள்,தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பறக்கும் படைகள்:
தேர்வுக்கானஅனைத்துப் பணிகளும், தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி.,செயலர்,விஜயகுமார் தெரிவித்தார்.அவர், மேலும் கூறியதாவது:மாநிலம் முழுவதும், 226பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்ட கலெக்டர்கள், முதுநிலை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து,தேர்வைகண்காணிப்பர். 79,550 பேர்: பறக்கும்படையில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறுதுறை அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். 392,வாகனபறக்கும் படைகளும்அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடையினர்,தேர்வுமையம்வாரியாகச்சென்று,தேர்வைகண்காணிப்பர்.சென்னையில் மட்டும், 263 மையங்களில் நடக்கும் தேர்வில், 79,550பேர் பங்கேற்கின்றனர்.
அப்ஜக்டிவ் முறையில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டபின், நடக்கும் முதல் குரூப்- 2 தேர்வு இதுதான்.குரூப்- 1 தேர்வுக்கு அடுத்து,மிகவும் முக்கிய தேர்வாக, குரூப்- 2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார்தெரிவித்தார்.
ஜெனரல்ஸ்டடிஸ்:பகுதியில், 75கேள்விகள்; திறன் அறிதல் பகுதியில், 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொதுஆங்கிலம் பகுதியில் இருந்து, 100கேள்விகள் என,மொத்தம், 200கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும்,தலா, 1.5 மதிப்பெண்வீதம், 300மதிப்பெண்களுக்கு,தேர்வு நடக்கிறது.
முக்கியகாலிபணியிடங்கள்
வருவாய் துறையில் உதவியாளர்- 360
கூட்டுறவு சங்க முதுநிலைஆய்வாளர்- 165
கைத்தறிதுறை ஆய்வாளர்- 147
பால்வளதுறை,முதுநிலைஆய்வாளர்- 137
துணைவ ணிகவரி அலுவலர்- 66
தொழிலாளர் நல ஆய்வாளர்- 9
உள்ளாட்சி தணிக்கை ஆய்வாளர்- 7
இந்து அறநிலையதுறை,தணிக்கை ஆய்வாளர்- 39

Comments
Post a Comment