தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் தற் காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண் ணப்பம் அளிக்க முதுகலை பட்டதாரிகளிடம் ஆர் வம் இல்லாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப் பட்டு உள்ளது. 

 தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது. இந்த சம்பளம் பெற்றோர் ஆசிரியர் கழக த்தின் நிதியில் இருந்து அரசு பெற்று தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. இந்த தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலம், கணி தம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங் களுக்கு தலா ஒரு ஆசிரியரும், வேதியியல் பாடத்திற்கு 2 பேர், வணிகவியல் பாடத்திற்கு 5 பேர், பொருளியல் பாடத் திற்கு 8 பேர் என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள் ளன. குறிப்பாக முருக் கோடை அரசு பள்ளியில் மட்டும் மொத்தம் 5 முதுகலை ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இந்த காலிப்பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க இது வரை தகுதியுள்ள யாரும் ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் காலிப்பணியிடங் களுக்கு தற்காலிக ஆசிரியர் களை நியமிக்க முடியாத நிலை உள்ளது. பணியிடங்கள் காலி யாக உள்ள பள்ளிகளில் மாண வர்களின் கல்வித்திறன் பாதிக் கப்பட்டு உள்ளது. 

காரணம் என்ன?
 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு திண்டுக்கல்லில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணியை தொடர்ந்து, 2 அல் லது 3 மாதங்களுக்குள் புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் பணியில் சேர்ந்து விடுவார்கள்.

 இதனால் தற்போது தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய் யப்படுபவர்கள் வேலை இழக் கும் நிலை ஏற்படும் என்று கருதி தற்காலிக பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க முதுகலைப் பட்டதாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக கூறப் படுகிறது.

Comments

Popular posts from this blog