முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒருபிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்புகணக்கிடப் படும்.

எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

Comments

Popular posts from this blog