திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந் தேதி நடத்தப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் மாதம் 1–ந் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– குரூப்–2 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2)–ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வினை 1–12–2013 அன்று நடத்த திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், அதே நாளில் (1–12–2013) வேறு சில தேர்வு வாரியம்/ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி (குரூப்)–2 தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
7 லட்சம் பேர் விண்ணப்பம் மேற்படி, கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி–2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல் விண்ணப்பித்திருப்பதாலும், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாலும், அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியம்/ஆணையங்களின் போட்டித் தேர்வுகள், துறைத் தேர்வுகள் இருப்பதனாலும், மேற்படி தேர்வினை விரைந்து முடித்து தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொருட்டு இத்தேர்வினை தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 1–12–2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment