சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர் ஆப்சென்ட்? 

தமிழகம் முழுவதும், 14 மையங்களில், நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், அதிகமானோர், "ஆப்சென்ட்" ஆனதாக கூறப்படுகிறது.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதற்கு, 72 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 70 பேர் மட்டும் பங்கேற்றனர். 70 பேரும், உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

 இன்று நடக்கும் சரிபார்ப்பிற்கு, 70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இதர 13 மையங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், அதிகமான தேர்வர்கள்,"ஆப்சென்ட்" ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், இதில், பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என, ஏற்கனவே, டி.ஆர்.பி., திட்டவட்டமாக அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.

Comments

Popular posts from this blog