ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சுமார் 156 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களது மனுக்களை ஒன்று சேர்த்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், திங்கள் அன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயமாக்கியது தேசிய ஆசிரியர் பயிற்சி கல்வி வாரியம்.
ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தேர்வெழுதாமல் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. 18 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படவில்லை.

இதையடுத்து இவர்கள் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறைவு பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவுக்குப் பிறகும் அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே, பணி கிடைக்காதவர்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog