டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நட்ராஜ் இருந்த போது, பல வகை குரூப் தேர்வுகளை, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வசதியாக, "நிரந்தரப் பதிவு' முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறப்பு கட்டணம்:
இதன்படி, ஒரு விண்ணப்பதாரர், நிரந்தரப் பதிவிற்கான சிறப்புக் கட்டணம் ஒரு முறை செலுத்தினால், அந்த விண்ணப்பதாரரின் பெயர், விவரம், முகவரி உட்பட அனைத்து விவரங்களும், ஐந்து ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படும். விண்ணப்பதாரர், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல், இத்தேர்வில் பங்கேற்க முடியும். 

அவர்களுக்கானபதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு தனியாக வழங்கப்படும். நிரந்தர பதிவுதாரர்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக, ஐந்து ஆண்டுகள் வரை, குரூப் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கும்போது, பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு, நேரடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்கென புகைப்படம், சான்றுகள் என, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க தேவையில்லை. கூடுதல் கல்வி தகுதி இருந்தால் மட்டும், அதை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

குரூப் - 2 தேர்வு:
தற்போது, சார்-பதிவாளர் உட்பட, 1,064 பதவிகளுக்கு, குரூப் - 2 போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு, ஆன்-லைனில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது, டி.என்.பி.எஸ்.சி. ஆன்-லைனில், நிரந்தர பதிவிற்கான விவரங்கள் ஏதும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதனால், நிரந்தர பதிவாளர்கள், புகைப்படங்களுடன், தங்கள் முழு விவரங்களையும் மீண்டும் பதிவு செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தர பதிவாளர்கள் கூறுகையில்,"இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, அக்., 4, கடைசி தேதி. அதற்குள், நிரந்தர பதிவாளர்களுக்கு ஏற்கனவே உள்ள வசதிகளை, டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்றனர்.

Comments

Popular posts from this blog