ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட்17, 18ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டுபிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மனுதாரர் கருப்பையா கோரிக்கைபடி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தார். கருப்பையா மனுவுக்கு தமிழக அரசு 2வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.
மனு விபரம்
தமிழகத்தில் ஆகஸ்ட்17, 18தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ஆதி திராவிடர்,பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இட ஓதுக்கீடு அளிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் வழி உள்ளது. தேர்வு நடத்தும் மாநிலங்கள் ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம் என விதி உள்ளது. சில மாநிலங்கள் ஆதி திராவிடர்,பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்தியுள்ளன. எனவே தமிழக அரசும் ஆதி திராவிடர்,பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்க்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

Comments

Popular posts from this blog