எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் வதந்தியை நம்பவேண்டாம்என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு
சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி வாரியம் 10–வது வகுப்பு தேர்வை, நடத்தி வருகிறது. பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறது. இதில் மாணவர்கள் எதைவிரும்புகிறார்களோ அந்த தேர்வை எழுதலாம். வாரியம் நடத்தும் தேர்வைத்தான் பெரும்பாலான மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.
பள்ளிக்கூடங்கள் நடத்தும் தேர்வை குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் எழுதுகிறார்கள்.இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
சி.பி.எஸ்.இ. இப்படி நடவடிக்கை எடுத்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி வாரியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2014–1015–ம் ஆண்டு ரத்து செய்துவிடும் என்றும் 10–வது வகுப்பிலும் முப்பருவமுறை தேர்வுகள் வரும் என்றும் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பரவலாகபேசுகிறார்கள்.
ஆசிரியர்களும் முப்பருவ முறை வந்தால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பொதுத்தேர்வாக இருக்காது என்றவதந்தி உள்ளது. இதனால் தற்போது 9–வது வகுப்பு படிக்கும் மாணவர்களிடத்தில் பிளஸ்–2 தேர்வில் நன்றாக படிக்கலாம் என்ற மெத்தனப்போக்கு உள்ளது.
எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 2014–2015 கல்வி ஆண்டில் நடைபெறுமா? என்று கேட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் கூறியதாவது:–
தேர்வில் மாற்றம் இல்லை
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் எந்த வித மாற்றமும் இல்லை. இரு தேர்வுகளும் வழக்கம்போல நடைபெறும். யாரும் வதந்தியை நம்பவேண்டாம். பிளஸ்–2 தேர்வு முதலில் நடைபெறும். பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும். தேர்வு முறைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments
Post a Comment