டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்–4 தேர்வு ‘கீ ஆன்சர்’ வெளியீடு இணையதளத்தில் பார்க்கலாம்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், சர்வேயர்,வரித்தண்டலர் ஆகிய பதவிகளில் 5,566 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) குரூப்–4 தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ இரவு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டது.
இதில், தமிழ், ஆங்கிலம், பொதுஅறிவு ஆகிய தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஸ்கேனிங் செய்யப்பட்டு அவற்றுக்கான விடைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. விடைகள் தொடர்பாக ஏதேனும் முறையீடுகள் இருந்தால் அதுகுறித்து செப்டம்பர் 1–ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment