ஆசிரியர் தகுதி தேர்வு போலி வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை

இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.

தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள்பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து முக்கிய நபரின்செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். 

 அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரின் எண்கள் என தெரியவந்தது. இருவரின் எண்களுக்கும் ஏற்கனவே குரூப்&2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ள இளையராஜாவின் செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது.

நேற்று முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீ சார் தெரிவித்தனர்.

போலி கேள்வித்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கபோலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

பயிற்சி மையங்களில் விசாரணை: 
கடந்தாண்டு நடந்ததேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முன் கூட்டியே ரகசியமாக கேள்வித்தாள் சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தாண்டும்பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog