ஆசிரியர் தகுதி தேர்வு மேல் முறையீடு: கருணாநிதி கண்டனம்-Dinamani

ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சான்று சரிபார்ப்பு ஏற்கெனவே முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. இது மிகத் தவறான முடிவாகும்.ஆசிரியர்கள் எல்லாம் மன நிறைவு தரும் முடிவு என்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் அரசு மேல் முறையீடு செய்தால், அது ஆசிரியர்களுக்கு எதிராகஎடுத்த முடிவாகவே இருக்கும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாட முதலில் அனுமதி மறுத்து, தற்போது மீண்டும் வாதாட நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்குரைஞர் பகத்சிங், தமிழில் வாதாட அனுமதியளித்தநீதிபதி ஆகியோருக்கு நன்றி என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog