முதுகலை ஆசிரியர் தேர்வு - ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம்செய்ய : டி.ஆர்.பி., எச்சரிக்கை
"முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த, 1.68 லட்சம் பேரில், இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே,"ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள், உடனடியாக,பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என, டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.
டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: வரும், 21ம் தேதி, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, தங்களின், "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும், 63 ஆயிரம் பேர், பதிவிறக்கம் செய்யவில்லை. தேர்வு தேதி நெருங்கி வருவதால், அனைவரும், உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
தேர்வு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என, நினைத்தால், தேவையில்லாமல் பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப எண்களையும், பிறந்த தேதியையும், சரியாக பதிவு செய்து, "சப்மிட்' கொடுத்தால், "ஹால் டிக்கெட்' கிடைக்கும். அனைத்து தேர்வர்களுக்கும், "ஹால் டிக்கெட்' வெளியிட்டுள்ளோம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Post a Comment