முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டி தேர்வு: 1 ½ லட்சம் பேர் நாளை எழுதுகிறார்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை–1 பதவிகளுக்கான போட்டித் தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டன. மீது முள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 57,134 ஆண்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 526 பெண்களும் அடங்குவர்.
பார்வைத் திறன் குறைவுடையோர் 971 பேரும், மாற்றுத் திறனாளிகள் 7535 பேரும் இத்தேர்வை எழுதுகிறார்கள்.
இதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 32 மாவட்டங்களில் 421 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 8383 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள்.
சென்னையில் 55 மையங்களில் தேர்வு நடக்கிறது. 13927 பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஆண்கள் 3649 பேரும், பெண்கள் 10278 பேரும் போட்டித் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள்.
பார்வைத்திறன் குறைவுடைய விண்ணப்பத்தாரர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்களுக்கு தரைதளத்திலேயே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பார்வைத்திறன் குறைவுடைய தேர்வர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுதுபவர்களுக்கு ஆன்–லைன் மூலமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் 14 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்யவில்லை.
வழக்கம்போல இந்த தேர்வு விண்ணப்பத்திலும் விண்ணப்பதாரர்கள் நிறைய தவறுகள் செய்துள்ளனர். பிறந்த தேதி, பாடப் பிரிவுகளை தவறாக குறிப்பிட்டுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித்சிங் சவுத்திரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog