அரசு நிதியுதவி பள்ளிகளில்
ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்
சிவகங்கை: அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12,2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Comments
Post a Comment