ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள்,இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– தமிழ்–ஆங்கிலம் பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்) கணிதம்–இயற்பியல் பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு) பி.எஸ்சி. இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்) தாவரவியல்–விலங்கியல் பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்) பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்) வரலாறு பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்) மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog