ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் விண்ணப்பம் விற்பனை.
ஜூன்.28 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எட்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய தகுதித் தேர்வில் 150மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெறவேண்டும்.ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஆகஸ்டு 17-ந்தேதி தாள்-1 (இளநிலை ஆசிரியர் பயிற்சி) 18-ந்தேதி தாள்-2 (பட்டபடிப்புடன் ஆசிரியர் பயிற்சி) தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் 17-ந்தேதி முதல் அனைத்துமாவட்ட கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்படுகிறது.இரண்டு தேர்விற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தகுதியும் உடையவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதித்தேர்வு எழுத விண்ணப்பங்கள் வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருகிறார்கள்.10 நாளில் 8 லட்சம் படிவங்கள் விற்பனையாகி உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூலை 1-ந்தேதி மாலை 5மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.சென்னையை பொறுத்தவரை 21 அரசு பள்ளிகளில் தகுதித்தேர்வு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த முறை தேர்வு மையங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னையில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வடசென்னைமாவட்ட கல்விஅலுவலகம், அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி எழும்பூர், தென் சென்னை மாவட்டக்கல்வி அலுவலகம், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி எழும்பூர், கிழக்குமாவட்ட கல்வி அலுவலகம், ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு, மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் சமர்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. படிவத்துடன் வங்கி செலான் இணைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்து அதன் நகலில் சீல் வைத்து விண்ணப்பதாரர்களுக்கு தருவதற்கு சிறிது நேரம் ஆகிறது. அதனால் 4 இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் கூட்டம் அதிகமாகவாய்ப்பு உள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment