தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்! பாதிப்பில் ஆசிரியர்கள் நெல்லை மாவட்டத்தில் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத சுமார் 200 ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . குழந்தைகளுககான இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டம் 2009 (4) ன்படி பிரிவு 23 உள்பிரிவு (1) ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது . மேலும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும் இதனை அங்கீகரித்துள்ளதோடு இதனை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயித்துள்ளது . எனவே 23.08.2010 க்கு , பின்பு சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிடடுள்ளார் . அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி நெல்லை , தென்காசி , சேரன்மாதேவி கல்வி மாவட்டங்களின் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தகுதி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது . மாவட்டத்தின் 2010 முதல் 2012 வரை அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று பணி நியமனம் செய்யப்பட்ட 200 ஆசிரியர்களின் ஊதியமும் மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் ஆசிரியர்கள் கடும் அதிருப்திக்கும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் . தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த 15/11/2011 ல் பிறப்பித்த உத்தரவின்படி 23/08/2010 க்குப் பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்தோருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது . அதன்படி இன்னமும் கால அவகாசம் இருந்தும் கூட திடீரென ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டது நியாயமல்ல . அவர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும் . உரிய கால அவகாச முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் தமிழநாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் .

Comments

Popular posts from this blog