ஆசிரியர் தகுதி தேர்வு இரு வண்ணங்களில் விண்ணப்பம் அரசு பள்ளிகள் மூலம் விநியோகம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 2 வண்ணங்களில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை, 1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தேர்வுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொளி தலைமை வகித்தார். இணைஇயக்குநர் சேதுராமன் வர்மா, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் ஆலோசனை அளித்தனர்.
திருச்சி உட்பட 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 66 மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் குழப்பமின்றி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பவது. திட்டமிட்டபடி தேர்வை சிறப்பாக நடத்துவது. தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டிஇடி) வரும் 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்செய்யப்படுகிறது.
கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, குழப்பத்தை தவிர்க்கும் வகையில் புது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி, வழக்கமாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும். இனி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத பகுதிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அதேபோல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு தனித்தனி விண்ணப்பங் களைசமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இரண்டு வண்ணங்களில் விண்ணப்பம் அச்சிடப்பட்டு, விநியோகம் செய்யப்படஉள்ளது என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment