முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, கடைசி நாளான நேற்றுடன், 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, நேற்று வரை வழங்கப்பட்டன. இதில், 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரை விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், நேற்று, கடைசி நாள். நேற்றுடன், 1.42 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஒரு சில மாவட்டங்களில், சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தால், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, மேலும் சில ஆயிரங்கள் வரை அதிகரிக்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment