டெட் தேர்வு - எதிர்க்க குழு அமைப்பு
டெட் தேர்வு எதிர்ப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மதியம்(16.02.2013) சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் நடை பெற்றது. பாதிக்கப்பட்ட சிலர் உட்பட சுமார் 20 பேர் பங்குபெற்றனர்.
டெட் தேர்விலும் ஆசிரியர் பணி நியமனத்திலும் முறையாக இட
ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கப் போராடுவதற்காக "இட ஒதுக்கீட்டுப் போராட்டக் குழு" ஒன்று அமைப்பது என முடிவு செய்யபட்டது. இதில் பேரா.மு.திருமாவளவன், பேரா.ப.சிவகுமார், பேரா.அ.மார்க்ஸ் முதலான சுமார் 10 பேர்கள் முதற் கட்டமாகப் பங்கேற்கின்றனர். தங்கத் தமிழ் வேலன் இக்குழுவை ஒருங்கிணைப்பார்.
இட ஒதுக்கீட்டைத் தெளிவுபடுத்திய பின்னரும், சென்ற தேர்வில் நடைபெற்றமுறைகேடுகளைக் களைந்த பின்பே அடுத்த தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யவும், தேசிய ஆசிரியக் கல்விக் கழகத்திடமிருந்துவிளக்கம் பெறவும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்வது எனவும், அதற்கென மூத்த வழக்குரைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கைகளைத் தமிழகமெங்கும் அச்சிட்டு வினியோகிப்பது, கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்புக்கு :தங்க தமிழ் வேலன், 9952930165-thanks http://www.facebook.com /psivakkumarr
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment